சிவகங்கை அருகே கோவானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த அசோக் என்பவரை சோதனையிட்டதில், அவரிடம் இருந்து சுமார் 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அசோக் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.