மாட்டு வண்டி பந்தயத்தில் 42 ஜோடி மாடுகள் பங்கேற்பு

149பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டுப் பிரிவிற்கு 8 மைல் தூரமும், சிறிய மாற்று பிரிவிற்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு, இரு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று உற்சாகமாக கண்டு களித்தனர்.