6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

0பார்த்தது
6 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸார் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்த 6 பேர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி இந்த உத்தரவைப் பிறப்பித்தார். குணா, வெற்றிவேல், தினேஷ், முத்துப்பாண்டி, சின்னையா, ஹரிஹரன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி