கோவிலுக்கு சென்ற சிறுவன் தவறி விழுந்து பலி!!!

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சியில் உள்ள பாலமுருகன் கோவிலுக்குச் சென்றபோது, 7 வயது சிறுவன் சஞ்சித் மலையின் இடைப்பட்ட பகுதியில் உள்ள சுனையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தான். மதுரை மாவட்டம் பொட்டப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்-சகுந்தலா தம்பதியின் ஒரே மகனான சஞ்சித், உறவினர்களுடன் மலை ஏறும்போது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி