பாலாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி

148பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கொடுங்குன்றம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலடி கருப்பர், கால பைரவர் கோவிலில் பாலாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் திடல், கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 5-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி