சிவகங்கை: ஆதார் சேவை; ஆட்சியர் முக்கிய தகவல்

78பார்த்தது
சிவகங்கை: ஆதார் சேவை; ஆட்சியர் முக்கிய தகவல்
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் செயல்படும் 1,552 குழந்தைகள் மையங்களிலும் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையத்தில் "முறைசாரா முன்பருவக் கல்வி" செய்கைப்பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் வாயிலாக அளிக்கப்படுகிறது. 

இத்திட்டத்தில், குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை, ஆடிப்பாடி விளையாடுபாப்பா எனும் சிறப்புப் பாடத்திட்டத் திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்லவும் ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். 

மேலும், அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சேர்க்கைப் பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே, பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வருகின்ற ஜூன் 2025ம் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்த்திடவும், குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்றுவருவதால், அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி