சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வளாகத்தில் ராதிகா (10), ஹர்ஷித்(11), வேதபிரபா(8), ரித்திகா (9), சஷ்மிதா(5), தாருண்யா (9) ஆகிய ஆறு சிறுவர்கள் சிலம்பம் மற்றும் யோகா திறன்களில் உலக சாதனை படைத்துள்ளனர். இச்சாதனைக்காக அவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.