மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு.

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் வெள்ளஞ்சாம்பட்டியில் மின்சார ஊழியர் ஜெகதீஸ் மற்றும் விறகு வியாபாரி பூமிநாதன் ஆகியோர் மின்சார லைன் அருகில் உள்ள மரங்களை முறையற்ற வகையில் வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கிராம மக்கள் தடுத்தும் மரங்கள் வெட்டப்பட்டதாகவும், ஓராண்டுக்கு முன் இதேபோல் மரங்கள் கடத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பூமிநாதன் மீது இருபது ஆண்டுகளாக இதுபோன்ற புகார்கள் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி