சிவகங்கை மாவட்டம் எஸ். புதுக்குளம் பகுதியை சேர்ந்த லூர்துபீல், சேம்பர் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் இடையே
கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் நிலவி வந்தது. இந்நிலையில், லூர்துபீல் இளையான்குடி – சாத்தரசன்கோட்டை சாலையில் சென்றபோது, அலெக்சாண்டர் அவரை வழிமறித்து
கிரிக்கெட் பேட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.