சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் பயன்படுத்தப்பட்ட 10 அரசு வாகனங்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த ஏலம் நவம்பர் 26, 2025 அன்று பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். Tata Indigo, Mahindra Bolero, Scorpio உள்ளிட்ட வாகனங்கள் விற்பனைக்கு உள்ளன. ஏல விலை நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறையக் கூடாது, ஜிஎஸ்டி தனியாக செலுத்த வேண்டும். பங்கேற்பாளர்கள் ₹1,000 வைப்புத் தொகையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.