ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஆட்சியர் தகவல்

0பார்த்தது
ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஆட்சியர் தகவல்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் கேபின் க்ரூவ், விமான நிலைய பயணிகள் சேவை, பயணியர் சேவை மற்றும் பயணச்சீட்டு முன்பதிவு, சுற்றுலா போக்குவரத்து போன்ற பயிற்சிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற விரும்புவோர் ஆதிதிராவிடர்/பழங்குடியினராகவும், 18-23 வயதுக்குட்பட்டவராகவும், பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு IATA-International Air Transport Association-Canada அங்கீகரித்த சான்றிதழ் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி