சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பரனாச்சி அம்மன் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில், கிராம மக்கள் பாதுகாப்பு கோரி திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் மற்றும் செந்தில் ஆகியோர் விழா காலங்களில் பிரச்சனை செய்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த திருவிழா பங்குனி மாத கடைசி வாரத்தில், வனப்பகுதியில் இருந்து மார்கள் எனப்படும் செடிகொடிகளை சேகரித்து, மின்சாரம் இன்றி தீப்பந்த வெளிச்சத்தில் பக்தி பரவசத்துடன் நடத்தப்படுகிறது. ஆதிதிராவிடர், நகரத்தார் மற்றும் பிற சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.