முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் அஷ்டாங்க தங்க விமான கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து, வருகின்ற 22 ஆம் தேதி இந்திய துணை குடியரசுத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்ய உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார் சிறப்பு பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். கோயில் நிர்வாகம், போக்குவரத்து, மின்சாரம், தீயணைப்பு, சுகாதாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி