சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோயிலில், 108 அடி உயரத்தில் அஷ்டாங்க விமானமாக அமைந்துள்ள மூலவர் கோபுரத்தின் தங்கத் தகடு வேயப்பட்ட திருப்பணி முடிந்து, இன்று (பிப். 6) கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நியூ புக் இந்தியா நிறுவன ஊழியர் முத்து-மேகலா தம்பதியினர், உறவினர் கூறிய சிறப்பால் வந்து கும்பாபிஷேகத்தைக் கண்டதாகவும், நாராயணனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.