சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார். தகுதி நாள் 1.1.2026 ஆகும். காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.