சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே நவீன் குமார் (29) என்பவர் போட்டித் தேர்வில் வெற்றி பெறாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.