நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொது விநியோகத் திட்டத்திற்காக தனித்துறை உருவாக்க வேண்டும், TNCSC எடை தராசுகளை விற்பனை முனையங்களுடன் இணைத்து அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு நேரடி எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும், மகளிர் நியாய விலை கடைகளை அரசு நேரடியாக நடத்தி நிலையான ஊதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமையை குறைக்க கூடுதல் பணியாளர்கள் நியமனம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி