சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, திடீரென இன்று மதியம் சுமார் 12 மணியளவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நீண்டநாட்களாக மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.