சாலைகிராமம் அருகே, குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவியை தாக்கியதாகக் கூறப்படும் கணவர் கார்த்திக், அவரது தந்தை ஜெயராமச்சந்திரன் ஆகியோர், மனைவியின் தந்தை மதியழகனை கம்பால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மதியழகன் தனது மகளை அழைத்துச் செல்லும் வழியில் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கார்த்திக், ஜெயராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.