கையை வெட்டிய நான்கு பேர் கைது குன்றக்குடி போலீசார் விசாரணை

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை கிராமத்தில், கருப்பையாவின் மகளை பக்கத்து வீட்டு உறவினர் முத்துவீரனின் மாமியார் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, முத்துவீரன் என்பவர் கருப்பையாவையும் அவரது மகன் செல்வராஜையும் வெட்டுவதாக மிரட்டியுள்ளார். பின்னர், முத்துவீரன் தனது உறவினர்களுடன் வந்து செல்வராஜை கத்தியால் தாக்கி அவரது ஒரு கையை துண்டித்துள்ளார். படுகாயமடைந்த செல்வராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருப்பையா அளித்த புகாரின் பேரில், குன்றக்குடி காவல்துறையினர் முத்துவீரன் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி