திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் தங்க விமான கும்பாபிஷேகம்

194பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோயிலின் 108 அடி உயர அஷ்டாங்க விமான தங்கத் தகடு திருப்பணி நிறைவடைந்து, இன்று (பிப். 6) கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பிப். 3 முதல் 7-ம் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை 9:26 முதல் 10:18 மணிக்குள் தங்க விமானத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாதுகாப்பு பணிக்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி