சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதையொட்டி, மதுரையிலிருந்து திருப்பத்தூர் வழியாகச் சென்றபோது மருத்துவமனையில் ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் நலம் விசாரித்து, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மகப்பேறு மருத்துவமனை கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதால் அங்கு பிரசவம் பார்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 1972ல் கட்டப்பட்ட கட்டிடம் நன்றாக உள்ள நிலையில், 2010ல் கட்டப்பட்ட மகப்பேறு கட்டிடம் 15 ஆண்டுகளுக்குள் மோசமடைந்தது வேதனை அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.