சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (மே 24) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக, கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த கடும் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. நகர், கிருங்காகோட்டை, ஒடுவன்பட்டி, பிரான்மலை, சிவபுரிபட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலத்த சூறைக்காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த இந்த மழை, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது.