சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் எம்எல்ஏ சீனிவாச
சேதுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "நாள்தோறும் மக்கள் குறைகளை தீர்க்க எனக்கு நேரம் போதவில்லை. அவ்வளவு குறைகளை மக்கள் தேக்கி வைத்திருக்கிறார்கள். காரில் பயணிக்கும் போதும், தூங்க செல்லும் முன்பும் கூட என்னை நம்பி வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறேன்" என்றார். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.