அரண்மனை வாசல் முன்பு ICDS ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவைகள் (ICDS) ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், ஊதிய உயர்வு, நிரந்தர நியமனம், பணி நிலைத்தன்மை, பணிச்சுமை குறைப்பு உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ள இந்த போராட்டத்தில், தங்களது முக்கிய கோரிக்கைகள் தீவிரமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.