சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் பேட்டி

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு, துணை சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள், வட்டார மருத்துவமனையில் 6-7 மருத்துவர்கள், மாவட்ட தலைமை மருத்துவமனையில் 70-80 மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரியில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருப்பார்கள் என விளக்கினார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், சிவகங்கை மாவட்டத்தில் மருந்து அல்லது மருத்துவர் இல்லையென ஆதாரத்துடன் கூறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி