சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி

0பார்த்தது
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் எவ்வளவு காலம் நீடிப்பார் என்பது காலம்தான் பதில் சொல்லும் என்றார். மேலும், தமாக தலைவர் விஜய், பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் என பொதுவானதை பேசுவது கொள்கை கிடையாது என்றும், ஒவ்வொரு விஷயத்திலும் இனி தங்களது கொள்கையை விளக்குவார்கள் என நம்புவதாகவும் கூறினார். SIR திட்டம் ஒரு வருடத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டும் என்றும், அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு பணிச்சுமை ஏற்பட்டு சிலர் உயிரிழந்ததாகவும், இணைய சேவை இல்லாததால் படிவங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றும், குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் செயல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்தார். தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட வேண்டும் என்றும், 30 நாட்களுக்குள் வாக்காளர் நீக்கல் மற்றும் புதிய வாக்காளர் சேர்ப்பு செய்ய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி என்றும் அவர் கூறினார்.