சிங்கம்புணரி அருகே மணப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் (52) என்பவர் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பகுதியில் இயற்கை உபாதை கழிக்கும்போது, கக்கன்ஜி நகரைச் சேர்ந்த சோலைமலை மற்றும் பிச்சை என்ற சரவணன் ஆகியோர் அவரிடம் பேச்சுக் கொடுத்து, கழுத்தில் அணிந்திருந்த 2¾ பவுன் தங்கச் செயினை பறிக்க முயன்றனர். இதில் முத்துக்குமார் செயினைப் பிடித்துக் கொண்டதால், 1¼ பவுன் மதிப்புள்ள செயினின் ஒரு பகுதி கீழே விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு இருவரும் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.