சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள கலியுக அய்யனார், பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் ஸ்ரீ சங்கிலி கருப்பர் உள்ளிட்ட 64 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட நள்ளிரவு “கிடா பூஜை” சிறப்பாக நடந்தது. பாப்பாபட்டி வேளார் வம்சாவளியினரின் மரபு வழியில் நடைபெற்ற இவ்விழாவில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். விழாவில் கிடா வெட்டி சமைத்து, பச்சரிசி சாதம் உருண்டையாக உருட்டி ஆட்டுக்கறி ரசத்துடன் படையல் வைத்து பூஜை நடத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அதே உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சி அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.