சிவகங்கை மாவட்டம் கட்டையன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் வைகாசி பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 16ஆம் ஆண்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சிறப்பாக விளையாடிய காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் 5 பேர் லேசான காயமடைந்தனர்.