சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, சிங்கம்புணரி ஒன்றிய நகர திமுக சார்பில் 5வது ஆண்டு தென்னிந்திய அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் நான்கு கபடி அணிகளுக்கு அமைச்சர் பெரிய கருப்பன் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கினார்.