சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்கள் நினைவுத்தூணில் தமிழ்நாடு அரசின் கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டி. கே.
பிரபு மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச
சேதுபதி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு
அரசியல் கட்சி நிர்வாகிகள், சமுதாயத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.