500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து விலகல்

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எஸ். புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்மணி பாஸ்கரன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் மாவட்ட கவுன்சிலர், மாவட்ட சேர்மன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இவருடன் 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.