வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி -21 காளைகள் பங்கேற்பு

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வாகுடி கிராமத்தில் தண்டபாணி சுவாமி கோவில் திருவிழாவை ஒட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 21 காளைகள் மற்றும் 126 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட மாட்டினை 9 வீரர்கள் சேர்ந்து 25 நிமிடங்களுக்குள் அடக்க வேண்டும். இல்லையென்றால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். மாடுகள் பிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாகுடி, கட்டிக்குளம், முத்தனேந்தல் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் இந்த போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி