வடமாடு மஞ்சுவிரட்டு – தொடங்கி வைத்த அமைச்சர்

141பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு, தெற்கு மற்றும் ஒன்றிய நகர திமுக சார்பில் மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் போட்டியை தொடங்கி வைத்தார். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 14 காளைகள் பங்கேற்றன. 126 வீரர்கள் காளைகளை அடக்கினர். குறிப்பிட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் அமைச்சர் பரிசுகளை வழங்கினார். ஏராளமான பொதுமக்கள் போட்டியை உற்சாகமாக கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி