புதிய கலையரங்கம் கட்டிடம் திறப்பு விழா

159பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில், குருவாடிபட்டி கிராமத்தில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளருமான பொன்மணி பாஸ்கரன், தன் சொந்த நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய கலையரங்கு கட்டிடத்தை 100 வயது முதியவரை முன்னிறுத்தி கழக நிர்வாகிகள் முன்னிலையில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக இத்தொகுதியில் வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என எந்த அடிப்படை வசதியும் செய்யப்படாமல் இக்கட்டான சூழ்நிலையில் தொகுதி உள்ளதாகக் கூறினார். மேலும், அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்பதே தங்கள் சிந்தனை என்றும், ஊழல் பணத்தில் இலவசங்கள் வழங்குவோரை விட, மக்களின் தேவையை அறிந்து செயலாற்ற காத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, தொகுதியை இழக்காமல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Job Suitcase

Jobs near you