சிவகங்கை: வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம்

369பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிக்கும் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அரசுக்குச் சொந்தமான காலியிடங்களில் வீடு கட்டுவதற்காக பட்டா வழங்கக் கோரி சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் நிர்வாகிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது வெறும் விளம்பரம் என குற்றம்சாட்டினர்.

தொடர்புடைய செய்தி