சிவகங்கை மாவட்டம் புளியால் அரசு உயா்நிலைப் பள்ளிக்குச் செல்லும் சாலை வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்தச் சாலை 10-க்கும் மேற்பட்ட முக்கியக் கிராமங்களை இணைக்கும் சாலையாகவும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட எல்லைச் சாலையாகவும் உள்ளது. மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.