இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சிவகங்கை வீரர்

2பார்த்தது
டெல்லியில் நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச கிக் பாக்ஸிங் கப் -2026 போட்டியில், தமிழ்நாடு கிக் பாக்ஸிங் சங்க பொதுச் செயலாளர் திரு சுரேஷ் பாபு தலைமையில் இந்திய அணி சார்பில் 69 வீரர்கள் பங்கேற்றனர். இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர் ரஞ்சித், லைட் காண்டாக்ட் -57 எடை பிரிவில் பாலஸ்தீன வீரரை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த தகவலை மாணவரின் பயிற்சியாளர் மற்றும் சிவகங்கை கிக்பாக்ஸிங் சங்க பொதுச் செயலாளருமான ச. குணசீலன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி