சிவகங்கை மாவட்டம் ஏ. காலாப்பூர் அருகே கீழவடக்கு தெருவைச் சேர்ந்த தங்கராஜ் (52), கடந்த இரண்டு வருடங்களாக விஷவண்டு கடியால் உடல்நலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட புண்கள் மற்றும் வலியால் மதுபோதைக்கு அடிமையான அவர், இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி சித்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து எஸ். வி. மங்களம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.