தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் சாமி தரிசனம்

1பார்த்தது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவிலில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று மாலை தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். திருச்சி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பிள்ளையார்பட்டி வந்தடைந்த அவர், கற்பக விநாயகரை தரிசித்ததுடன், கோவிலின் வெளிப் பிரகாரத்தில் அகல் விளக்கேற்றி வழிபட்டார். இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையில், கரூர் நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் CBI விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆவணங்களை வைத்து, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you