சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், தமிழ்நாடு அரசு ஊழியர்-ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அமல்படுத்தப்பட்ட பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும். மேலும், ஒன்றிய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ள ஊதிய அநீதிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிங்கம்புணரி ஒன்றியம் முழுவதும் உள்ள 66 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சுமார் 95 சதவீதம் பேர் பங்கேற்றனர். சாரல் மழை பெய்தபோதும், மழையைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.