சிங்கம்புணரி: மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

355பார்த்தது
சிங்கம்புணரி அருகே உள்ள 600 ஆண்டுகள் பழமையான ஆத்ம நாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் திருக்கோவிலில் மாசிமகப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விநாயகர், திருமுருகப்பெருமான், ருத்ரகோடீஸ்வரர், ஆத்மநாயகி மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளினர். கொடியேற்றத்திற்குப் பிறகு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் சதுர்வேதமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி