ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பள்ளி தாளாளர்

4பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியின் 30ஆம் ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சேதுராமன் மற்றும் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தாளாளர் சேது குமணன், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு 4 கிராம் தங்க நாணயம் மற்றும் மலேசியாவிற்கான சுற்றுலா பயணத்திற்கான ஆணையை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார். இதை எதிர்பாராத பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.