சிவகங்கை: சிவன் கோயில் பகுதியில் உள்ள கடையில் திருட்டு

72பார்த்தது
சிவகங்கை: சிவன் கோயில் பகுதியில் உள்ள கடையில் திருட்டு
சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில் அருகே கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த கடையின் மேல்மாடி வழியாக கடைக்குள் சென்ற திருடன் கடையிலிருந்த கல்லாவைத் திறந்து ரூபாய் பத்தாயிரத்தை செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவெங்கடேஷ் என்பவர் திருடியதாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கோபி வயது (24) என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து திருடர் குறித்து சிசிடிவியின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.