சிவகங்கை: தமிழகத்தில் நிதி நெருக்கடி உண்டு; அமைச்சர் பேச்சு

85பார்த்தது
சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் இன்று (அக்.,5) மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கலந்துகொண்டு 30 மாணவர்களுக்கு ரூ 2 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். முன்னதாக மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் தமிழகத்தில் நிதி நெருக்கடி உண்டு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் இருந்தபோதிலும் மாணவர்களின் கல்வி நலனுக்காக இந்த அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது.

இந்த ஆண்டு கல்வித்துறைக்கென 47 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். கல்விக்காக இந்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடன் பெற காட்டும் ஆர்வத்தை பெற்றோர்கள் திரும்ப செலுத்துவதிலும் காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you