காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் மூன்று பேர் பலி

2பார்த்தது
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிப்பாறையில், குன்றக்குடி ஆதீன மடத்துக்கு உட்பட்ட பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெற்ற மாசிமகத் திருவிழாவில், அரசு அனுமதியுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதனிடையே, தொழுவத்திலிருந்து மாடுகள் அவிழ்த்து விடப்படுவதற்கு முன்னதாக வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில், நாட்டார் மங்களம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன், சுந்தரராஜ் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் என மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி