சிவகங்கை: சாலை வசதி கேட்டு யூனியன் அலுவலகம் முற்றுகை

352பார்த்தது
சிங்கம்புணரி அருகே  சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 கி.மீ. தூரம் கொண்ட கரடுமுரடான சாலை காரணமாக 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பள்ளி மாணவர்கள், நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பேட்ச் வொர்க் செய்ய வந்த இயந்திரங்களை எதிர்த்து கிராம மக்கள் புதிய சாலை அமைக்க வலியுறுத்தி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
Job Suitcase

Jobs near you