வைகாசி விசாக பிரமோற்சவப் பெருந்திருவிழா

0பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள அருள்மிகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசி விசாக பிரமோற்சவப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, நள்ளிரவில் கழுவன் மற்றும் கழுவச்சி மூதாதையர் சுதைச் சிற்பங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உடல் முழுவதும் கருப்பு சாயம் பூசி, முகத்தை மறைக்கும் ஜடாமுடி அலங்காரம், அரைஞாண் கயிறு மற்றும் திகிலூட்டும் வேடத்துடன் கழுவன் கோவிலுக்குள் அழைத்து வரப்பட்டார். பின்னர், தீப்பந்தங்களுடன் ஆயிரக்கணக்கான கிராமத்து இளைஞர்கள் கழுவனை விரட்டிச் சென்றனர்.