வாக்காளர்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் -ஆட்சியர் தகவல்

2பார்த்தது
வாக்காளர்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம் -ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 30, 2026 வரை புதிதாக வாக்காளர் சேர்க்க 28,007, பெயர் நீக்க 2,221, திருத்தம் செய்ய 24,346, வெளிநாடு வாழ் வாக்காளர் சேர்க்க 17 என மொத்தம் 54,591 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதிப் பட்டியலுக்குப் பின்னரும், வேட்புமனு தாக்கல் செய்ய 10 நாட்களுக்கு முன்னர் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ள மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு காலாண்டிற்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி